மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலையை தணித்து, போரை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே தீவிர தூதரக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, இரு நாடுகளுக்கும் இடையே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று விரைவில் கையெழுத்தாக உள்ளதாக ஈரான் தரப்பு தெரிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தம் வரும் ஞாயிற்றுக்கிழமை கையெழுத்தாகக்கூடும் என்று சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில், அதனை ஈரான் தற்பொழுது மறுத்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை ஒப்பந்தம் கையெழுத்தாகாது என்றும், ஆனால் 'வரும் நாட்களில்' அது சாத்தியமாகும் என்றும் ஈரான் வெளியுறவுத்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தின் இறுதி விதிமுறைகள் மற்றும் சில முக்கிய நிபந்தனைகள் குறித்து இருதரப்பும் இன்னும் ஆலோசித்து வருவதே இந்த தாமதத்திற்கு காரணம் எனத் தெரிகிறது.
நீண்டகாலமாக நீடித்து வரும் பிராந்திய மோதல்களுக்கு இந்த ஒப்பந்தம் ஒரு நிரந்தர தீர்வை வழங்கும் என சர்வதேச அரசியல் முற்போக்காளர்கள் கருதுகின்றனர். இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் பட்சத்தில் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மட்டுமல்லாது, உலகளாவிய பொருளாதார மற்றும் அரசியல் சூழலிலும் பெரும் மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், ஒப்பந்தத்தின் உள்ளடக்கங்கள் மற்றும் நிபந்தனைகள் குறித்த முழுமையான விபரங்கள் இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இதுகுறித்த மேலதிக தகவல்கள் வெளியாகவில்லை.

0 Comments