தமிழக சட்டமன்றத் தேர்தல்‌ 2026

 


இந்தியா, தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று (23) காலை 7.00 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

வாக்குப்பதிவு தொடங்கியது முதல் பொதுமக்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.


தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், அரசியல் தலைவர்கள், கட்சி நிர்வாகிகள், திரைப்பிரபலங்கள் என பலரும் வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று காலை 9.00 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் 17.69 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.


இதற்கமைய இதுவரை 1 கோடியே 1 லட்சம் பேர் வாக்களித்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றனர்.

Post a Comment

0 Comments